கோலிவுட்டில் 31 ஆண்டுகளைக் கடந்த அஜித் குமார்! வைரலாகும் பழைய வீடியோ!

பல வருடங்களாக வெளியுலகிற்கு தரிசனம் தராத அஜித் குமார், 31 ஆண்டுகளைத் திரையுலகில் கடந்ததையடுத்து அவரது பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

கோலிவுட்டில் 31 ஆண்டுகளைக் கடந்த அஜித் குமார்! வைரலாகும் பழைய வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் அஜித் குமார், தமிழ் சினிமா துறையில் கால்பதித்து 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரின் ரசிகர்கள் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தும் கொண்டாடிவும் வருகின்றனர்.

அறிமுகம்:

தமிழ் சினிமாவில் 1993ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் அஜித்குமார். தொடர்ந்து நடித்த பாசமலர்கள், பவித்ரா திரைப்படம் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும் இதன்பிறகு வெளிவந்த வந்த ஆசை படம் அஜித் குமாருக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது.

தொடர் வெற்றி:

இதனை தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை கடைசியாக வெளிவந்த வலிமை வரை தமிழ் சினிமாவில் முன்னெனி நடிகராக திகழ்ந்து வருகிறார் அஜித் குமார்.

‘தல’ வேண்டாம்:

ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அஜித் குமார், தல என்கிற பட்டம் வேண்டும் என்னை அஜித் குமார் என்றே அழையுங்கள் என அறிக்கை வெளியிட்டதை அடுத்து அஜித் குமார் என்று தான் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் பைக் ரைடு:

இந்நிலையில், தற்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் அஜித் குமார், இப்படப்பிடிப்பு தொடங்கும் முன் ஒரு பைக் ரைடு செல்ல வேண்டும் என்று எண்ணி ஐரோப்பிய நாடுகளில் உலா வரும் போட்டோஸ் இணையத்தில் வைரலானது.

30 Years of Ajithsm:

இந்நிலையில், தமிழ் சினிமா துறையில் கால்பதித்து 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரின் ரசிகர்கள் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தும் கொண்டாடிவும் வருகின்றனர். அந்த வகையில், அஜித்தின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

2009ஆம் ஆண்டு அசல் படத்தின் துவக்க விழாவில் பேசிய அஜித், “நான் வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறேன், சுமாரான படங்களையும் கொடுத்திருக்கிறேன்...  சினிமாவை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வி என்பது சகஜம்.. இதையும் மீறி ஒரு நல்ல மனுஷனாக இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.. உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப நன்றி.. இது எனக்கு ரொம்ப பெருமையான தருணம் என அஜித் தெரிவித்திருக்கிறார்.