“இனி சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை” - ரஜினியிடம் கட்டன் ரைட்டாக கூறிய ஐஸ்வர்யா!!

“இனி சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை” - ரஜினியிடம் கட்டன் ரைட்டாக கூறிய ஐஸ்வர்யா!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் இவர்களது பிரிவு குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இணையத்தில் ஒவ்வொரு தகவலும்  வைரலாக பேசப்பட்டு வருகிறது. இவர்களை பற்றி வரும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றது. அதேசமயம் இருவரையும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  

அந்த வரிசையில் சூப்பர் ஸ்டாரும், ஐஸ்வர்யாவின் தந்தையுமான ரஜினிகாந்த், உனது இரு மகன்களுக்காகவும், எனக்காகவும் இருவரும் சேர வேண்டும் என மகள் ஐஸ்வர்யாவிடம் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு “நாங்கள் இருவரும் இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை” என ஐஸ்வர்யா கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் தனது  மகளின் வாழ்க்கையை நினைத்து  ரஜினி மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னர் ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்ததாக சில தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து தற்போது வெளியான இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு தள்ளியுள்ளது.