"வாழ்த்துக்கள் நண்பரே" தனுஷின் பதிவுக்கு ஐஸ்வர்யா சொன்ன பதில் என்ன? இணையத்தில் வைரலாகும் ட்விட்!

வாழ்த்துக்கள் நண்பரே என்று தனுஷ் போட்ட பதிவுக்கு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருப்பது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.

"வாழ்த்துக்கள் நண்பரே"  தனுஷின் பதிவுக்கு ஐஸ்வர்யா சொன்ன பதில் என்ன? இணையத்தில் வைரலாகும் ட்விட்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதையடுத்து மீண்டும் இயக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில் இன்று பயணி மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டது. தமிழில் நடிகரும், ஐஸ்வர்யாவின் அப்பாவுமான ரஜினிகாந்த் அதனை வெளியிட்டார். தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் இப்பாடலை வெளியிட்டனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில்,  தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் பதிவும் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும் நடிகர் தனுஷின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் மீம்ஸ் மூலமாக வறுத்தெடுத்து வருகின்றார்கள்.