நடிகையை அடுத்து மற்றொரு துறையில் கால் தடம் பதித்த அதிதி ஷங்கர்!! என்ன தெரியுமா..?

நடிகையை அடுத்து மற்றொரு துறையில் கால் தடம் பதித்த அதிதி ஷங்கர்!! என்ன தெரியுமா..?

நடிகையும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளுமான அதிதி சங்கர், கோலிவுட்டில் ஏற்கனவே இருக்கும் வாரிசு நடிகர்கள் வரிசையில் கடந்த ஆண்டு இணைந்து நடித்து வருகிறார். 

தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ’விருமன்’ படத்தில் தேன்மொழி என்ற கிராமத்து கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகி முதன்முதலாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கவிருக்கும் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை என்ற கட்டத்தை அடுத்து இன்னொரு துறையிலும் கால் தடம் பதித்துள்ளதாக நடிகை அதிதி சங்கர் தனது டுவிட்டர் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது நீண்டநாள் கனவே ஒரு பாடகியாக வேண்டும் என்பது தான், அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது என்றும், இசையமைப்பாளர் தமன் அவர்களின் இசையில் ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், வருண்தேஜ் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ‘கானி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரோமியோ ஜூலியட்’ என்ற பாடலை பாடியிருப்பதாகவும், என்னை நம்பி இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அதிதி ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகையாக அறிமுகமாகி தற்போது  பாடகியாக மாறியுள்ள அதிதி ஷங்கருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.