கமலுடன் நடிக்க மறுத்த 3 நடிகைகள்..! நதியாவை வ(லை)ளைத்த படக்குழு?

கமல் பெயரை கேட்டு தெறித்து ஓடிய 90’ஸ் நடிகைகள்..!

கமலுடன் நடிக்க மறுத்த 3 நடிகைகள்..! நதியாவை வ(லை)ளைத்த படக்குழு?
கமல்ஹாசன் படம் இயக்குகிறார் அல்லது நடிக்கிறார் என்றாலே அந்தப்படம் கண்டிப்பாக பல பிரச்னைகளை கடந்து தான் வெளியிடப்படும். கருத்து ரீதியாக, சமூக ரீதியாக என பல இன்னல்கள் படப்பிடிப்பின் போதே ஆரம்பம் ஆகி விடும். உலக நாயகன் என்ற பட்டம் போல், சர்ச்சை நாயகன் என்று கூட கமலுக்கு பட்டம் கொடுக்கலாம். அந்த அளவு அவரது எழுத்துக்கள் மட்டுமல்ல படங்களிலும் பிரச்னைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் தற்போது பாபநாசம்2-க்கும் புது பிரச்னை எழுந்துள்ளது. 

திரிஷ்யம் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமைக் தான் பாபநாசம். கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருந்த பாபநாசம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவு வரவேற்பை பெற்றது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நபரின் மகளுக்கு வரும் பிரச்னையை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே பாபநாசம். கமல்ஹாசன் படங்களில் குடும்பங்கள் கொண்டாடிய ஒரு படங்கள் வரிசையில் பாபநாசமும் ஒன்று. 

திரையில் பல்வேறு மாயாஜாலங்களை செய்து வந்த கமல், தனது படத்தில் கண்டிப்பாக 18+ சீன்களை வைக்க மறக்க மாட்டார். 80’ஸ்-களில் இதுபோன்ற நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடிப்பதாலேயே கமல்ஹாசனை வெறுத்தவர்களும் உண்டு. ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப் பட்டதே இல்லை. ஆனால் அவரது பாபநாசம் படம் முற்றிலும் வித்தியாசமான குடும்பஸ்தன் கதைகளத்தில் உருவாகி இருந்ததால், அப்படத்தில் 18+ சீன்கள் இடம்பெறவில்லை. அதேபோல இவரிடம் சிக்கும் நடிகைகள் படாத பாடு படுவார்களாம். மிக நெருக்கமாக நடிக்கும் காட்சிகளிலும் சரி, அவருடன் ஈடு கொடுத்து நடிப்பதிலும் சரி, கதாநாயகிகளை பிழிந்து எடுத்து விடுவார் என்ற பேச்சும் உள்ளது. இந்த நிலையில், மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2வை தமிழிலும் ரீமைக் செய்யவுள்ளனர். 

திரிஷ்யம்-2 -வை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் தமிழிலும் இயக்கவுள்ளார். பொதுவாக கமல் படத்திற்கு வெளியில் இருந்து தான் பிரச்னை வரும். ஆனால் இந்த படத்திற்கு நாயகிகளே பிரச்னையாக உள்ளனர். பாபநாசத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கௌதமி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் கமலுடன் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே கமலுடன் இனி சினிமாவில் கூட சேர்ந்து நடிக்கப் போவதில்லை என கௌதமி கூறியதால், அவருடன் வேறு யாரை ஜோடி சேர்ப்பது என்று பெரிய ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. 80’ஸ், 90’ஸ் நடிகைகளிடம் வலை வீசிய போது அனைவரும் அய்யோ கமலுடன் நடிப்பதா? வாய்ப்பே இல்லை என அலறி வருகின்றனர். 

சரி, மலையாளத்தில் நடித்த மீனாவையே தமிழிலும் நடிக்க வைக்கலாம் என யோசித்த போது, ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிடும் என படக்குழு நினைத்தது. இருப்பினும் ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்கலாம் எனக் கேட்ட போது, ஏற்கனவே அவருடன் சேர்ந்து நடித்தப் போது ஏற்பட்ட இன்னல்களே எனக்கு போதும், எத்தனை கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என மறுத்துள்ளார். மீனாவும், கமல்ஹாசனும் அவ்வை சண்முகி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக, 80’ஸ்-களில் கொடிக்கட்டி பறந்த கதாநாயகிகளில் ஒருவரான சிம்ரனிடம் கேட்ட போது, குடும்பத்தோடு தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கமல் ஏற்கனவே என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டதால், இனி அவருடன் நடிக்கும் எண்ணம் இல்லை என திட்ட வட்டமாக கூறியிருக்கிறார். பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், ஆளவந்தான் போன்ற படங்களில் இருவரும் ஜோடி போட்டு நடித்துள்ளனர். 

இறுதியாக, அமெரிக்காவில் இருக்கும் நதியாவிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தினர். கமலும்-நதியாவும் தான் பாபநாசம்-2-வில் நடிக்கவுள்ளதாக பல தகவல்கள் இணைய தளங்களில் பேசப்பட்டது. எப்படி அவர் ஒத்துக் கொண்டார் என பலரும் ஆச்சர்யப்பட்ட நிலையில், நதியா முதலில் கமலுடன் சேர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்ததாகவும், பின்னர் சம்பள உயர்வு மற்றும் சில பல நிபந்தனைகளுடன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்கும் முதல் படமாக பாபநாசம்-2 இருக்கும். இருப்பினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.