நீ இன்னும் சாகலயா’? கமாண்ட்ஸ் போட்ட நெட்டிசனுக்கு யாஷிகாவின் நச் பதில்...

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நடிகை யாஷிகா ஆனந்த்  ரசிகர் ஒருவக்கு அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நீ இன்னும் சாகலயா’? கமாண்ட்ஸ் போட்ட நெட்டிசனுக்கு யாஷிகாவின் நச் பதில்...

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுவந்தார். சமீபத்தில் நடத்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு கையில் வால்கிங் ஸ்டிக்குடம் நடந்து வந்தார்.

அதே போல விபத்திற்கு பின்னர் யாஷிகா பெரும்பாலும் தன்னுடைய பழைய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் 4 மாதங்கள் கழித்து ஹேர் கலர் செய்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘நீ இன்னும் சாகலயா’ என்று கமன்ட் செய்ய அதற்கு பதில் அளித்த யாஷிகா ” என்று கூறியுள்ளார்.