நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

சாலை விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த  மோசமான கார் விபத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்.

அவருடன் பயணம் செய்த அவரது தோழி வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிவேக பயணம் மற்றும் விபத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் என இரண்டு பிரிவுகளின் கீழ், நடிகை யாஷிகா ஆனந்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். விபத்தில் யாஷிகா ஆனந்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.