மீண்டும் காளி அவதாரத்தில் நடிகை வனிதா!! இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் வைரல்!!

காளி கெட்டப்பில் இன்ஸ்டாகிராமில் வனிதா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

மீண்டும் காளி அவதாரத்தில் நடிகை வனிதா!! இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் வைரல்!!

கடந்த சில நாட்களாக மக்கள் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருந்த போது, அவர்கள் முனுமுனுக்க உதவியாக இருந்தவர் நடிகை வனிதா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார் வனிதா. 

நிகழ்ச்சியில் அனைவருக்கும் காளியாக திகழ்ந்து பல சண்டைகளோடு சேர்த்து வத்தி வைத்ததுமாக இருந்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார் வனிதா. பிக்பாஸ்-க்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிறந்த செப்ஃ ஆக புகழ்பெற்ற வனிதா அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்று அசத்தினார். 

பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டு மாஸ் காட்டி வந்த வனிதா, பீட்டர் பால் அளவுக்கு அதிகமாக போதை பொருட்களை பயன்படுத்தியதால் அவரை விட்டு பிரிந்தார். இணையதளங்களில் எங்கு பார்த்தாலும் வனிதாவின் குடும்ப கதைகள் விருவிருப்பாக ஓட ஆரம்பித்த நிலையில், பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்தார். 

இடையில் ஹரிநாடாருடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்படத்தின் பூஜை விழாவில் ஹரிநாடாருடன் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். தற்போது மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளித்திரையில் ரீ எண்ட்ரி ஆகலாம் என்ற கனவும் தகர்ந்து போனது வனிதாவுக்கு. 

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், வருண் சக்கரவர்த்தியுடன் ஜோடி சேர்ந்து கலக்கி வருகிறார். இதற்கிடையில், அந்நிகழ்ச்சிக்காக மேற்கு வங்காளம் காளி கெட்டப்பில் மேக்கப் இட்டுள்ள புகைப்படத்தை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆத்தா இந்த முறை என்ன என்ன செய்யப் போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.