நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட நபரின் மீது செருப்பை தூக்கி எறியும் சன்னி லியோன்..! வைரலாகும் வீடியோ!

நடிகை சன்னிலியோன் தன்னை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட நபரின் மீது செருப்பை தூக்கி அடிக்கும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது...

நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட நபரின் மீது செருப்பை தூக்கி எறியும் சன்னி லியோன்..! வைரலாகும் வீடியோ!

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சன்னிலியோன். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவிற்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ஆரம்பத்தில் கிளாமர் வேடங்களுக்காக மட்டுமே அறியப்பட்ட  இவர் தற்போது கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களில் வரிசைக்கட்டி பிசியாக நடித்துவருகிறார். அதன்படி தமிழில் ‘வீரமாதேவி’, ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் ரீலிசாக உள்ளது. அதுமட்டுமில்லாமல்  சினிமாவைத் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.

இப்படி சினிமாத்துறையில் பிஸியாக வலம் வரும் இவர், அதே சமயம் சோஷியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருவதால், அங்கும் நடிகை சன்னி லியோனை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் 52 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள சன்னி லியோன், அவ்வப்போது தனது கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களூக்கு விருந்து அளித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், நடிகை சன்னி லியோன் நீச்சல் குளம் அருகே நடந்து செல்கிறார். அவரின் உதவியாளர் அவருக்கு குடை பிடித்து வருகிறார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் ஒருவர் சன்னியை நீச்சல் குளத்தில் தள்ளிவிடுகிறார். இதனால் முழுவதும் நினைந்து போன சன்னி லியோன் செல்லமாக கோபித்துக்கொண்டு தன்னை தண்ணீரில் தள்ளிவிட்ட நண்பரை திட்டிக்கொண்டே தான் அணிந்திருந்த செருப்பை கிழட்டி சிரித்துக்கொண்டே அவர் மீது தூக்கி எறிகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)