இன்று 36 வது பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசன்!! டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்...

இன்று 36 வது பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசன்!! டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்...

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 36 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன்  ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிப்பில் மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும்  திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கி வரும் ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ஸ்ருதி, இன்று  தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.