படுக்க வர்றீயான்னு கேட்குறாங்க.. உங்க வீட்லேயும் பொம்பளைங்க இருக்காங்க.. நடிகை சோனா வேதனை!

சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்கள் பதிவிடப்படுவதாக நடிகை சோனா குற்றம்சாட்டியுள்ளார்.

படுக்க வர்றீயான்னு கேட்குறாங்க.. உங்க வீட்லேயும் பொம்பளைங்க இருக்காங்க.. நடிகை சோனா வேதனை!

தமிழ் திரையுலகிற்கு ”பூவெல்லாம் உன் வாசம்” படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சோனா.
தமிழ் மட்டுமில்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சோனா. 

தற்போது சிவப்பு மனிதர்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார் சோனா. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை சோனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்கள் பகிரப்படுவதாக கூறினார். சினிமாவை தாண்டியும் ஆர்ட்டிஸ்ட்டுகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும் கூறினார் சோனா.

படத்தைப் பற்றியும் படத்தில் இடம்பெறும் கேரக்டர் பற்றியும் விமர்சிக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் பர்சனல் அட்டாக் செய்யக்கூடாது. படுக்க வர்றியா என்றெல்லாம் கேட்கிறார்கள். அந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப அருவருப்பா இருக்கு என்றும் வேதனைப்பட்டார் சோனா.

உங்க வீட்டுலேயும் பொம்பளைங்க இருக்காங்க.. இதுமாதிரி பேசுறவங்க இனிமே திருந்துவாங்க என்று நம்புகிறேன் என்றும் கூறினார் சோனா. மேலு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருவதாகவும் கூறினார் சோனா.