சமந்தாவுடன் லஞ்ச் சாப்பிட்ட வரு... இணையத்தில் வைரலான புகைப்படங்கள்!!

சமந்தாவுடன் லஞ்ச் சாப்பிட்ட வரு... இணையத்தில் வைரலான புகைப்படங்கள்!!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த சில நாட்களாகவே சுவிட்சர்லாந்தில் தனது விடுமுறை நாட்களை ஜாலியாக கொண்டாடி வந்தார். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வந்தது. 

அந்த வகையில்  நடிகை சமந்தா  பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து லஞ்ச் சாப்பிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் சமந்தா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ண பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் ’யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும்  சமந்தா, நடிகை வரலட்சுமி மற்றும் தனது காஸ்ட்யூம் டிசைனர் நீரஜா ஆகியோர்களுடன் இணைந்து லஞ்ச் சாப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை சமந்தா தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.