ஹிந்தியில் பிரபல நடிகருடன் இணைந்த நடிகை சமந்தா!!

வெளியான சமந்தாவின் குக்குரே விளம்பரம்...

ஹிந்தியில் பிரபல நடிகருடன் இணைந்த நடிகை சமந்தா!!

கோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை  சமந்தா. திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் இவர் வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ’ஊ சொல்றியா’ பாடல் சென்சேஷனல் ஹிட்டாகியது.

இதனைத்தொடர்ந்து சமந்தாவின் ரசிகர்கள் அனைவரும் தற்போது  அவரின் அடுத்த படத்திற்காக காத்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் நடிப்பில் தமிழில் அடுத்ததாக  காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அக்ஷய் குமாருடன் இணைந்து  ஹிந்தி  விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதனை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும் அந்த வீடியோவிற்கு Police officer of the movie turns out to be a Kurkure chor. @akshaykumar what is this behaviour?  இவ்வாறாக அக்ஷய் குமாரை tag செய்து பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்கலை குவித்து வருகின்றனர்.