பிரிவுக்குப் பின் நடிகை சமந்தாவின் முதல் பயணம்... எங்கே தெரியுமா..? 

பிரிவுக்குப் பின் நடிகை சமந்தாவின் முதல் பயணம்... எங்கே தெரியுமா..? 

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் சமந்தா, நாக சைதன்யா பிரிவு. இருந்த போதிலும் இருவரின் பிரிவு குறித்து எந்த காரணங்களை வெளிப்படையாக கூறவில்லை. 

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனதை தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்திலும் விவாதிக்கப்பட்டன.

 
இதனால் கோபமடைந்த நடிகை சமந்தா விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார் சமந்தா. 

தற்போது தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப்பயணத்திற்கச் சென்றுள்ளார். ஷில்பா ரெட்டி என்ற சமந்தாவின் தோழி அந்த சுற்றுப் பயணம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

“டேக் ஆப், முதலில் யமுனோத்ரி” என அவர் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் சர் தம் யாத்ரா என்பது இந்துக்கள் அதிகம் செல்லும் ஒரு யாத்திரை. இமாலய மலைப் பிரதேசங்களான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்திரை அது. 

கிறிஸ்துவராக இருந்தாலும் சமந்தா இந்து மதக் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவார். தற்போது வட இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா.