அம்மாவானாலும் அழகு குறையாத சாய்ஷா.. ரசிகர்களை ஷாக்காக்கிய வைரல் புகைப்படம் ..!!

உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை நடிகை சாய்ஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அம்மாவானாலும்  அழகு குறையாத சாய்ஷா.. ரசிகர்களை ஷாக்காக்கிய வைரல் புகைப்படம் ..!!

தமிழில் வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாயிஷா. கடைக்குட்டி சிங்கம் என்ற பிளாக்பஸ்டர் மூவியில் நடித்த பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவிகிறது  நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சயிஷாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் இப்போதும் ஆறடி அழகிய அமுல் பேபி போல சேலையில் அம்சமாக இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

 திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் கஜினிகாந்த், காப்பான்,டெடி என தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து 3 படங்களில் நடித்த சாயிஷா ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரீல் கப்புள் இப்பொழுது ரியல் கப்புளாக மாறியுள்ள நிலையில் இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் கொண்ட சாயிஷா இப்பொழுது அதற்காக ஆயத்தமாகி வருகிறார்.


அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கும் சாயிஷா திருமணத்திற்கு பிறகும் துளியும் எடை கூடாமல் அப்படியே இருக்கிறார். இந்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.