காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கும், மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியரை தாக்கிய நிகழ்வுக்கும் என்ன வித்தியாசம்? - சாய் பல்லவி

காஷ்மீர் பைல்ஸ் படத்தில் நடந்ததற்கும், மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் எனக்கூற வைத்த நிகழ்வுக்கும் என்ன வித்தியாசம்? என நடிகை சாய்பல்லவி கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கும், மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியரை தாக்கிய நிகழ்வுக்கும் என்ன வித்தியாசம்? - சாய் பல்லவி

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சாய்பல்லவி, ஹைதராபாத்தில் உள்ள தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரபரப்பை ஏற்படுத்திய ’காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தில், இந்துப் பண்டிட்டுகளை இஸ்லாமியர்கள் கொல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரத்தில், மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியரை வழிமறித்து, ஜெய்ஸ்ரீராம் எனக் கூற வைத்த உண்மை சம்பவமும், அதே மனநிலையைப் பொறுத்தது தான் என கூறியுள்ள சாய்பல்லவி, இரண்டில் எந்தப்பக்கம் நின்றாலும் குறைந்தபட்சம் மனிதாபிமானத்துடன் இருப்பதே அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார். சாய்பல்லவியின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.