பிரபல தெலுங்கு நடிகருடன் ராஷ்மிகாவிற்கு திருமணமா? முற்றுபுள்ளி வைத்த நடிகை

பிரபல தெலுங்கு நடிகருடன் ராஷ்மிகாவிற்கு திருமணமா? முற்றுபுள்ளி வைத்த நடிகை

தெலுங்கு சினிமாவிலும், கன்னடா சினிமாவிலும் கொடிக்கட்டி பறப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும்  நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா, பலருக்கும் NATIONAL CRUSH ஆக மாறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணம் என வதந்திகள் பரவி வரும் நிலையில் தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மிகா மந்தனா விளக்கமளித்துள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய ராஷ்மிகா மந்தனா, திருமணம் குறித்து நான் இன்னும் யோசிக்கவே இல்லை என்றும், இப்பொழுது எனக்கு சின்ன வயது தான் என்றும், திருமண வயது இன்னும் வரவில்லை என்றும், திருமணம் பற்றிய எண்ணமே தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், தனது திருமணம் குறித்து கருத்து கூறிய ராஷ்மிகா மந்தனா, ‘யார் என்னை பாதுகாப்பாக நிம்மதியாக வைத்திருக்க உதவி செய்வார்களோ? அவருடன் தான் எனக்கு திருமணம் என்றும் கூறியுள்ளார். மேலும், காதல் குறித்து பேசிய ராஷ்மிகா, ‘காதல் என்பது ஒரு தரப்பில் இருந்து வெளிவருவது கிடையாது என்றும், இருவருக்கும் அந்த உணர்வு வரவேண்டும் என்றும் அவர் விளக்கம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருமணம் குறித்து வெளியான வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.