நடிகை பார்வதி நாயரின் புகைப்படத்தை இழிவுபடுத்திய புகார்...! முன்னாள் ஊழியர் கைது...!

நடிகை பார்வதி நாயரின் புகைப்படத்தை இழிவுபடுத்திய புகார்...! முன்னாள் ஊழியர் கைது...!

பிரபல நடிகை பார்வதி நாயர் கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், தனது வீட்டில் பொருட்கள் திருடுபோனது தொடர்பாக புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டில் பணிபுரிந்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள கைகடிகாரம், லேப்டாப், கேமரா, செல்போன் உள்ளிட்டவற்றை திருடிவிட்டதாக சந்தேகிப்பதாகவும், அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் முன்னாள் ஊழியரான சுபாஷ் சந்திர போஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாக சுபாஷ் சந்திரபோஸும் நடிகை பார்வதி நாயர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். 

பின்னர் தான் அளித்த புகார் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறியும், தொடர்ச்சியாக சுபாஷ் சந்திரபோஸ் தனது புகைப்படத்தை வெளியிட்டும், செல்போனில் தொடர்பு கொண்டும் மிரட்டல் விடுத்து வருவதாகவும் கடந்த வாரம் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மீது மீண்டும் ஒரு புகாரை அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் சுபாஷ் சந்திரபோஸ் மீது மீண்டும் நுங்கம்பாக்கம் போலீசார் மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துதல், இழிவுபடுத்தும் புகைப்படங்களை வெளியிடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த இரண்டாவது வழக்கில் சுபாஷ் சந்திர போஸை புதுக்கோட்டையில் வைத்து நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயல்...! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை...!