நட்சத்திர ஜோடியான நடிகை நயன் மற்றும் விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9-ல் திருமணமா?

நடிகை நயந்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நட்சத்திர ஜோடியான நடிகை நயன் மற்றும் விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9-ல் திருமணமா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் வருகிற ஜீன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

”நானும் ரவுடி தான்” படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த நடிகை நயந்தாரா அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனிடம் காதல் வசப்பட்டார். இதனையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் இருவரும் அடிக்கடி வெளியூர் மற்றும் திருப்பதி கோவில்களுக்கு பயணம் செய்வது என்று சுற்றுப்பயணத்தில் மும்மரமாக இருந்து வந்தனர். இதனால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து விக்னேஷ் சிவன் தனது காதலியான நடிகை நயந்தாராவுடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

அங்கு அவர்களுடன் சென்றிருந்தவர்கள், நடிகை நயந்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ”வருகின்ற ஜூன் 9ஆம் தேதி திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் திருமணம் நடைபெறப் உள்ளதாகவும், இதற்காக ஏற்கனவே அந்த இடங்களை பார்வையிட்டு வந்த  இந்த ஜோடி இன்று திருமணத்திற்கான தேதியை முன்பதிவு செய்து விட்டதாகவும்” உறுதிசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.