நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்.. நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி!!

நடிகை மீனா கணவரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்..  நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி!!
Published on
Updated on
2 min read

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு  திரைத்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நுரையீரல் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக சிசிக்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரது உடல் சைதாப்பேட்டையில் இருக்கும் மீனாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், மீனாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததை அடுத்து மீனா வீட்டிற்கு நேரில் சென்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்புவும், வாழ்க்கை கொடுமையானது, துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும்,  மீனாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் தனது  டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, வித்யாசாகர் உடலுக்கு கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, வித்யாசாகர் உடலுக்கு நடிகர் மன்சூரலிகான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் நடிகர் பிரபு தேவா, நடிகை ரம்பா, இயக்குனர் சேரன், நடிகை சங்கீதா, நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தினரும் நேரில் வந்து வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com