நடிகை மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்று..! முறையாக வரி செலுத்திருப்பதாக பாராட்டு..!

தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூருக்கும் மத்திய அரசு நற்சான்று வழங்கியுள்ளது..!

நடிகை மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்று..! முறையாக வரி செலுத்திருப்பதாக பாராட்டு..!

நடிகை மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு, முறையாக வரி செலுத்திய பிரபலம் என நற்சான்றிதழ் கொடுத்து பாராட்டியுள்ளது. மலையாளத்தில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலாமகவும், பிசியாகவும் இருந்து வந்த நடிகை மஞ்சு வாரியர். அனைத்து மலையாள முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 17 வயதில் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர், ஒரு வருடத்திற்கு ஏழு, எட்டு படங்கள் வரை நடித்து பிசியாக இருந்தவர். 1998-ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் மஞ்சு வாரியர். இடையில் இவருக்கும் திலீப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவாகரத்து பெற்றவர், குழந்தையை கவனித்து வந்தார். 

மத்திய அரசின் நற்சான்று...

நீண்ட வருடங்களுக்கு பிறகு ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்டரி கொடுத்தவருக்கு, மலையாள சினிமாவும், மக்களும் மீண்டும் அதே இடத்தை கொடுத்தனர். அதன் விளைவாக 40 வயதுக்கு மேலும் தற்போது தனது இரண்டாவது இன்னிங்சில் படு பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்திருந்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி ஆகியவற்றை நேர்மையாக செலுத்திய பிரபலங்களை பாராட்டும் வகையில் நற்சான்றிதழ் அளித்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2021-2022-ம் ஆண்டுக்கான வரியை முறையாக செலுத்தியதால், அந்த நற்சான்றிதழை மஞ்சு வாரியருக்கு மத்திய அரசு வழங்கி பாராட்டியுள்ளது. 

தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூருக்கும் நற்சான்று...

அதேபோல, பிரபல மலையாள திரையுலகின் தயாரிப்பாளரான அந்தோணி பெரும்பாவூருக்கும் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இவர் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லூசிஃபர், த்ரிஷ்யம், மரைக்காயர் உள்ளிட்ட 32 படங்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் மலையாள நடிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.