படப்பிடிப்பின் போது நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏற்பட்ட காயம்..!

சண்டை காட்சிகளில் நடிக்கும் போது நேர்ந்த விபத்து..!

படப்பிடிப்பின் போது நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏற்பட்ட காயம்..!

பேட்ட, மாஸ்டர் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்ற நடிகை மாளவிகா மோகனனுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் சிறு வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது இவர் 'யுத்ரா' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மாளவிகா சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். அப்படி வில்லன்களுடன் சண்டையிடும் காட்சியில் நடிக்கும் போது, எதிர்பாராத விதமாக கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கையில் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.