தொகுப்பாளாராக களம் இறங்கிய நடிகை கங்கனா ரனாவத்!!

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கங்கனா ரனாவத் புதிய தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளாராக களம் இறங்கிய நடிகை கங்கனா ரனாவத்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதன் முதலாக மும்பை திரையுலக பிரபலங்கள் மூலம்தான் நாடு முழுவதும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இன்று அந்த நிகழ்ச்சியானது அனைவரின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. தற்போது இதனை கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தும் அளவிற்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இதனிடையில் தற்போது லாக்கப் என்ற நிகழ்ச்சி ஏக்தா கபூர் தலைமையில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை நடிகையான கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் தனியாக லாக்கப்பில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு டிவி, போன், கடிகாரம் போன்ற எவ்வித தொடர்பும் இல்லாத சூழலில் போட்டியாளர்கள் இருக்க கூடும் என தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த போட்டி அறிமுகமானது குறித்து இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதனை அறிந்து கொள்வதற்காக இணையத்தில் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தை தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியிடும் முதல் போட்டியாளர் குறித்து தகவல்கள் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்.