இது டிரெஸா..? இல்ல கன்னி நாகம்மா..? பாம்பு உடையில் வேற லெவல் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

பாலிவுட்டின் பிரபல நடிகை ஜான்வி கபூர் அழகான கன்னி நாகமாக மாறி கவர்ச்சியில் படமெடுத்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.

இது டிரெஸா..? இல்ல கன்னி நாகம்மா..? பாம்பு உடையில் வேற லெவல் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார்.  இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ”தடாக்” படத்தின் மூலம் கதாநாயகியாக  அறிமுகமானவர். அதற்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட  ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் என்னதான் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தனக்கென்று உருவாக்கி, பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகையாக விளங்குகிறார்.

இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடைசியாக வெளிவந்த ஹிந்தி திரைப்படம் ரூஹி. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தையடுத்து, ஜான்வி கபூர் தனது தந்தையின் தயாரிப்பில் உருவான மிலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில், குட்லக், ஜெர்சி ஆகிய இரண்டு படங்களையும் கை வசம் வைத்துள்ளார் ஜான்வி கபூர். இப்படி நடிப்பில் சிறந்து விளங்கும் இவர், சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.  

இப்படி பாலிவுட்டில் சிறந்து விளங்கும் நடிகை ஜான்விகபூர், எப்போது தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமாவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், சமீபத்தில் அவரின் தந்தை தயாரிப்பில் வெளியான ‘வலிமை’ படத்திற்கு கூட தன்னால் முடிந்த  புரொமோஷன்களை  ஜான்வி செய்திருந்தார். இதையெல்லாம் கவனித்து வந்த ரசிகர்கள், தமிழில் பல பெரிய படங்களை போனி கபூர் தயாரித்து வரும் நிலையில், அவரது மகளான ஜான்வி கபூரும் தமிழில் நடிக்கலாமே என்ற தங்களின் விருப்பத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

என்னதான் ஜான்வி கபூர் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது தன் ரசிகர்களை கவரும் வகையில், கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்விக்கு, இன்ஸ்டாகிராமில் மட்டும் 15.8 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்ஸ்கள் இருக்கின்றனர். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் இவரின் மவுஸீ கூடியுள்ளது என்றே சொல்லலாம். 

இந்நிலையில், தற்போது பாம்பு தோல் போல மாடர்ன்  உடை அணிந்து, தன்னுடைய உடல் வளைவுகளை பளிச்சிட்டு காட்டி போட்டோஷூட் நடத்திய ஜான்வி கபூர், அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் இது என்ன கண்ணாடி விரியன் பாம்பா? என்று கமெண்ட் போட்டு கலாய்த்து வருவதோடு, ஜான்வியின் ஹாட்னஸை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். மறுபக்கம் நெட்டிசன்கள் சிலர் இது டிராஸா..? இல்ல கன்னி நாகம்மா...? கவர்ச்சியில் இப்படி படம் எடுத்து உள்ளாரே ஜான்வி என்று பதிவிட்டு வருகின்றனர்.