மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கிய பிரபல நடிகை!! வெங்காயம் தான் காரணமா..?

மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கிய பிரபல நடிகை!! வெங்காயம் தான் காரணமா..?

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகை பிபாஷா பாசு, தமிழில் ‘சச்சின்’ படம் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் நடிகை பிபாஷா பாசு ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் மாதவனுடன் இணைந்து ’ஜோடி பிரேக்கர்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில்,  ’ஜோடி பிரேக்கர்ஸ்’ படப்பிடிப்பின் போது நடிகர் மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கியதற்கான காரணம் என்ன என்பதை பல ஆண்டுகளுக்குப் பின்னர் கூறியிருப்பது  தற்போது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க வேண்டி வந்ததாகவும் ஆனால் அந்த காட்சியில் நடிக்க தான் மிகவும் தயங்கியதாகவும் கூறினார். அதற்கு காரணம் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் மாதவனின் மனைவி அருகில் இருந்ததாகவும், அதனால் தான் முத்த காட்சியில் நடிக்க தயங்கியதாகவும், ஆனால் மாதவனும் இயக்குனரும் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்ததாகவும் கூறினார்.

மேலும் முத்தக்காட்சியில் நடித்த பின்னர் வேகமாக மேக்கப் ரூமிர்க்கு சென்று பலமணிநேரம் இருந்ததாகவும், மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் போது அவரது வாயிலிருந்து வெங்காய வாசனை வந்ததால் அந்த வாசனை தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும், அதனால் தான் தனக்கு அலர்ஜியாக இருந்ததாகவும் பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பிற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அதிக அளவு வெங்காயத்துடன் கூடிய உணவை மாதவன் சாப்பிட்டதாக பிபாஷா பாசு பேட்டியில் கூறியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு முத்தக்காட்சியில் நடிக்க தயங்கியதற்கான காரணத்தை நடிகை பிபாஷா பாசு தற்போது கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.