நிலம் வாங்கி தருவதாக நடிகர் சூரியிடம் மோசடி - நடிகர் விஷ்ணு விஷாலை விசாரிக்கும் போலீசார்!

நிலம் வாங்கி தருவதாக நடிகர் சூரியிடம் மோசடி - நடிகர் விஷ்ணு விஷாலை விசாரிக்கும் போலீசார்!

நகைச்சுவை நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை ஐகோர்ட்டின் உத்தரவின் பெயரில் நடைபெற்று வருகிறது. 

நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக மூன்று முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியும் இருந்தனர்.

அதனை ஏற்று நடிகர் விஷ்ணுவிஷாலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது தந்தை ரமேஷ்கொடவாலாவிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.