மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்... வைரல் வீடியோ

நடிகர் விஷால் தனது வளர்ப்பு நாயின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்... வைரல் வீடியோ

தமிழ் திரைப்பட நடிகர் விஷால், தற்போது சில படங்களில் நடித்து ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

நடிகர் விஷால் தனது வீட்டில் ஆகஸ்ட் என்ற நாயை வளர்த்து வருகிறார். அந்த நாயின் பிறந்த நாளை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடிய விஷால், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவின் captions ஆக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகனே என்று பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், அழகான கேக்கை வெட்டி, நாயின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மேலும், அந்த நாய்க்கு மனிதர்களை போல உடையணிவித்து,  உணவு மேசையில் அமர வைத்து விஷால் பிஸ்கட்டை ஊட்டி விடுகிறார்.