”தங்கலான்” ஒத்திகையில் நடிகர் விக்ரமிற்கு விபத்து...படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா?

”தங்கலான்” ஒத்திகையில் நடிகர் விக்ரமிற்கு விபத்து...படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா?

தங்கலான் படப்பிடிப்பின்போது, நடிகர் விக்ரமிற்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டதில் அவரது விலா எலும்பு முறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகிய பொன்னியின் செல்வன் - 2 ஆம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது. இந்த படத்தில் ஆதித்தகரிகாலனாக நடித்த நடிகர் விக்ரம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். முன்னதாக, படம் வெளியாவதற்கு முன்னால், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக படக்குழுவினர் சென்னை, டெல்லி, திருச்சி, கோவை என பல்வேறு இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

இதையும் படிக்க : சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்...டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்களிடையே மோதல்...போலீசார் தடியடி!

இந்நிலையில் PS2 திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, நடிகர் விக்ரம் தங்கலான் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதன்படி, சென்னை ஈவிபி ஃபில்ம் சிட்டியில் நடைபெற்ற தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டு விலா எலும்பில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறிது காலத்திற்கு அவரால் படப்பிடிப்பில் தொடர முடியாது என நடிகர் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.