நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நிலை குறைவு...!

நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நிலை குறைவு...!

நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “மஹான்”. அந்த படத்தில் விக்ரம் அவர் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அடுத்ததாக இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 

இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.