நடிகர் விஜய் பிறந்தநாள்: 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

நடிகர் விஜய்யின் 30 வருட கலைப்பயணத்தை கொண்டாடும் வகையில் 30  பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் புஸ்ஸி வழங்கினார்

 நடிகர் விஜயின் முப்பதாம் ஆண்டு கலை உலக பயணத்தை முன்னிட்டு அடையாறு மகப்பேறு அரசு மருத்துவமனையில் இருக்கும் 30 குழந்தைகளுக்கு தென் சென்னை  மாவட்ட இளைஞரணி சார்பாக தங்க மோதிரம் மற்றும் பேபி கிட் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பேபி கிட்ஸ் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதாகவும் அடுத்த கட்டமாக தமிழக முழுவதிலும் கர்நாடகா, கேரளா,ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.