நடிகர் விஜய்யின் "வாரிசு".. செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் "வாரிசு".. செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

நடிகர் விஜய்யின், வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரை, படக்குழு வெளியிட்டுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 66 படத்தின் புதிய அப்டேட் நேற்று 6 மணிக்கு வெளியானது. அதன்படி, படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாகவும், கெத்தாகவும் அமர்ந்திருப்பது போல அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தப்படம்  2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தில் ராஜு தயாரிக்கிறார். மெகா பட்ஜெட் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.  இதில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

இந்நிலையில், விஜய் பிறந்தநாளான இன்று "வாரிசு" படத்தில் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.