நடிகர் விஜய் உடன் தெலுங்கான முதல்-மந்திரி வைரலாகும் புகைப்படம்!!

வம்சி இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் தெலுங்கானா முதல் மந்திரியை நேரில் சந்தித்துள்ள விஜயின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய் உடன் தெலுங்கான முதல்-மந்திரி வைரலாகும் புகைப்படம்!!

பிரபல  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதியன்று இப்படத்துக்கான படப்பிடிப்புகள் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார்.இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக இருக்கிறது. 

இப்படத்துக்கான படப்பிடிப்புகளில் முதற்கட்ட வேலைகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் ஐதாராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தெலுங்கான முதல் -மந்திரியை சந்திரசேகர் ராவ்வை விஜய் நேரில் சந்தித்து இருக்கிறார்.

 மேலும் ஐதாராபாத்தில் தளபதி 66 க்கான படப்பிடிப்புகள் நடந்து வரும் வேளையில் மரியாதை நிமித்தமாக இச்சந்திப்பு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.