தமிழ் திரையுலகின் மாஸ்டருக்கு இன்று பிறந்தநாள்!

நடிகர் விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

தமிழ் திரையுலகின் மாஸ்டருக்கு இன்று பிறந்தநாள்!

நடிகர் விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

நடிப்பு, நடனம், பாடல், காமெடி, ஆக்‌ஷன், டயலாக் டெலிவரி என ஒரு நடிகருக்குத் தேவையான அத்தனை அம்சங்களுடனும் மிளிர்கிறார் நடிகர் விஜய். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநர், அம்மா ஷோபா பின்னணி பாடகி என ஓர் கலைக்குடும்பத்திலிருந்து வந்த வாரிசு. எனினும் தனது கடின உழைப்பாலும், தோல்விகள் பலவற்றைக் கண்டும் கைவிடாத தன்னம்பிக்கையாலும் இன்று மாபெரும் வெற்றி சிகரத்தை அடைந்திருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் படையைக் கொண்டவர் விஜய். இன்று அவர் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இந்தாண்டும் கொரோனா காலத்தில் நலத்திட்ட உதவி, உணவு வழங்குதல் என பல்வேறு சமூக பணிகளை அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர். தற்போது சமூக ஊடங்களில் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிறது. முன்னதாக நடிகர் விஜய்யின் பிறந்தநாளை யொட்டி அவர் நடிக்கும் 65வது படத்தின் First Look வெளியானது.