காதில் அறைந்ததால் செவிதிறன் பாதிப்பு: நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த நடிகர்...

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதப்பேட்டை நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காதில் அறைந்ததால் செவிதிறன் பாதிப்பு: நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த நடிகர்...
Published on
Updated on
1 min read

சென்னையை சேர்ந்த நடிகர் மகா காந்தி சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த மாதம் 2ஆம் தேதி, மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்த போது, நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது, அதனை ஏற்க மறுத்து, விஜய் சேதுபதி பொதுவெளியில், தம்மை இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 பின்னர், விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தம் மீது, விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன், காதில் அறைந்ததாகவும், இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, கடந்த மாதம் 3ஆம் தேதி, விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக அவர் தரப்பில், அவதூறு பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற தம்மை தாக்கி, அதை உண் மைக்குப் புறம்பான செய்தியாக மாற்றியதற்காக, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com