உயிரிழந்துவிட்ட - ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா...!!

நாமக்கல்லில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ரசிகர் குடும்பத்தாரை நேரில் சந்த்தித்து நடிகர் சூர்யா ஆறுதல் கூறியுள்ளார். 

உயிரிழந்துவிட்ட - ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா...!!

நாமக்கல் மாவட்டத்தில் சூர்யா ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது லாரி மோதியதில்  உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த நடிகர் சூர்யா நேற்றிரவு நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் சூர்யா வந்திருந்த தகவலை அறிந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

ஜெகதீசன் வீட்டிற்கு சென்ற நடிகர் சூர்யா அவரின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தி, அவரது மனைவி ராதிகாவிற்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் மற்றும் அவரின் இரண்டரை வயது குழந்தையில் கல்வி செலவுகளையும் செய்வதாக கூறியுள்ளார்.