நடிகை பிரியங்கா மோகனுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நடிகர் சூர்யா!!

நடிகை பிரியங்கா மோகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் சூர்யா...
நடிகை பிரியங்கா மோகனுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நடிகர் சூர்யா!!
Published on
Updated on
2 min read

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா , பாண்டிராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. 

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவின், சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள், ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் மக்களின் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், மாபெரும் வெற்றியையும்  அடைந்தது அனைவரும் அறிந்ததே!

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பின்னதாக சூர்யாவின் திரைக்கு வந்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளிவந்த சமயத்தில் இருந்தே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்தனர். 

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இடையில், இன்று வெளியான  எதற்கும் துணிந்தவன் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். மேலும் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அதாவது கதாநாயகியாக ப்ரியங்கா மோகன் தனது எதார்த்த நடிப்பில் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். 

இப்படம் மூலம் சூர்யாவுக்கு முதன்முறையாக  நடிகை பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா தனக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்காவிற்கு பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார். 

இதனையடுத்து அந்த பரிசை போட்டோவாக பதிவிட்டு நடிகை பிரியங்கா மோகன் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் . 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com