நடிகர் சூர்யா: பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்!  

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படக்குழுவினரோடு தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

நடிகர் சூர்யா: பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்!   

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படக்குழுவினரோடு தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்படத்தின் போஸ்டர்களை அடுத்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது படக்குழு. இதைத்தொடர்ந்து இன்று ‘கூட்டத்தில் ஒருத்தன்படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெய் பீம்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.  பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடிக்கும் சூர்யாவின் இப்படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இப்படி அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் சூர்யா. இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யா, தனது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாக கொண்டாடினார்.

இதில் சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.