" இதுக்கா ஊ அம்ச்சா...ஆஃப்பா..." டான் நகைச்சுவை காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட நடிகர் சூரி...!

சிவகார்த்திகேயனும், சூரியும் பேசிக்கொள்ளும் கொரியன் மொழி நகைச்சுவை காட்சியின் மேக்கிங் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

" இதுக்கா ஊ அம்ச்சா...ஆஃப்பா..." டான் நகைச்சுவை காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட நடிகர் சூரி...!

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் கடந்த மே 13 ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அந்த படத்தின் முக்கியமான நகைச்சுவை காட்சியான, சிவகார்த்திகேயனும், சூரியும் பேசிக்கொள்ளும் கொரியன் மொழி நகைச்சுவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் சூரி, அந்த காட்சியின் மேக்கிங் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நடிப்பு, தயாரிப்பு என இரண்டையும் முழு முனைப்புடன் செய்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டான். முன்னதாக நெல்சன் இயக்கத்தில் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுத்தந்தது. அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிய டான் திரைப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூரியா, சிவாங்கி,  சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்திருந்தனர். மேலும் படத்தில் ஆர் ஜே விஜய், சூரி ஆகியோர் இருப்பதனால் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லாமல் படமானது நகர்ந்தது.  

காதல், காமெடி, அப்பா செண்டிமெண்ட் என கலவையாக உருவாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  கல்லூரியில் பெரும் அட்டகாசம் செய்யும் குறும்புக்கார மாணவனாக SK நடித்துள்ளார். இந்த டான் திரைப்படம் வெளியான 2 வாரத்திலேயே உலக அளவில் 100 கோடி வசூலை வாரி குவித்தது. ஒரு அறிமுக இயக்குனரின் முதல் படமே 100 கோடி வசூலை ஈட்டி இருப்பது அவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. 

இந்நிலையில், டான் திரைப்படத்தில், ஒரு சிறப்பான நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருந்தது. கல்லூரியில் SK செய்யும் தவறை பெற்றோரிடம் சுட்டிக்காட்ட அவரிடம் பெற்றோரை அழைத்து வரும் படி, ஆசிரியர் கூறுவர். உடனே SK உண்மையான பெற்றோரை அழைத்து வந்தால், மாட்டிக்கொள்வோம் என்பதால், சூரியை அப்பாவாக நடிக்க வைக்க திட்டமிட்டு கூட்டிக்கொண்டு வருவார்.

அப்போது இருவரும், தமிழ் மொழியையே கொரியன் மொழி போல் " இதுக்கா ஊ அம்ச்சா...aannfa .." என இருவரும் பேசுவது நல்ல நகைச்சுவைகாட்சியாக அமைந்தது. அதோடு, அந்த நகைச்சுவை மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்தது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களை திறந்தாலே ரீல்ஸ் என்ற பெயரில், மக்கள் அதனை recreate செய்து வருகின்றனர்.

தற்போது அந்த காட்சியின் மேக்கிங்கை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அந்த வசனத்தை இயக்குனர் கூற அதை பேசும் போது இருவரும் பேசி சிரிப்பதும், அவர்களோடு சேர்ந்து படக்குழுவும் சிரிப்பதுமாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அனுதீப் kv இயக்கத்தில் தற்போது சிவா கார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.