நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. முதலாவதாக பெண் பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதா ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளந்திருக்கிறார். உறவுப்பெண் ஆர்த்தியை  சிவகார்த்திகேயன் மணந்துகொண்டார். 

இத்தம்பதிக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.