நடிகர் சிம்பு வெளியிட்ட - வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்!! 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் சிம்பு வெளியிட்டு இருக்கிறார். 

நடிகர் சிம்பு வெளியிட்ட - வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்!! 

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தின் சிம்பு நடித்து இருக்கிறார். இதற்கு முன்னதாக இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படங்கள் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை தொடர்ந்து மீண்டும் உருவாகி வரும் இந்த கூட்டணியை காண்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு காத்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார், இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர். இதனால் மக்களின் மத்தியில் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்புகளும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. 

இதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முதல் லிரிக்கல் வீடியோவான  “காலத்துக்கும் நீ வேனும்” பாடலானது இன்று மாலை 6:30 மணியளவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாமரை எழுதியிருக்கும் இந்த பாடலை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து வருவதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.