கிரிக்கெட் விளையாடிய நடிகர் ரஜினிகாந்த் - அதுவும் இளையராஜா வீட்டில்...!!

தமிழ் சினிமாவினுடைய முன்னணி நடிகர் ரஜினிகாந்த் இளையராஜா வீட்டிற்கு சென்ற பொழுது கிரிக்கெட் விளையாடியுள்ளார். 

கிரிக்கெட் விளையாடிய நடிகர் ரஜினிகாந்த் - அதுவும் இளையராஜா வீட்டில்...!!

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிக்க இருக்கும் படத்துக்கான விவாதங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சில பல மனக்கசப்புகள் காரணமாக இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கு செல்வதால் அவருக்கு அமைதி கிட்டுவதாகவும் மனநிலை மாறுவதாகவும் கூறியிருந்தார். 

ஆனால் அவரின் உடல்நிலை மாற்றத்திற்கு பின்னதாக இமயமலைக்கு செல்வதை தவிர்த்து வருகிறார். அதற்கு மாற்றாக தான் ஆன்மிக அமுதம் அருந்தும் இடம் எங்காவது உள்ளதா என தேடிய படி இருந்துள்ளார் அதற்கு குறைதீர்கும் விதமாக தான் இளையராஜாவும் அவரது வீடும் இருந்துள்ளது. இதையடுத்து தான் சமீப காலமாகவே இளையராஜாவை சந்தித்து பேசிவருகிறார் நடிகர் ரஜினி. 

இங்கு வந்தால் நான் நிம்மதியாக உணர்கிறேன் சாமி.. உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இல்லையே என்று இளையராஜாவிடமே ரஜினி ஏக்கத்துடன் கேட்டது இதனால்தான். இளையராஜாவை சந்திப்பது அவருக்கு இமய மலைக்கு போய் வந்த மன ஆறுதலை கொடுத்திருக்கிறது என்பதே நிஜம். இருவருக்குமிடையேயான நட்பு என்பது திரைத்தொழிலைத் தாண்டியது என்கின்றனர். 

எப்போதெல்லாம் இளையராஜாவை சந்திக்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்போது ஒரு போனை போட்டு சாமி உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா என்று கேட்டு விட்டு புறப்பட்டுவிடுவார் ரஜினி. அப்படி ஒருநாள் ரஜினி இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கு செல்ல ரஜினி வருகையால் வீடே குதூகலமாகியிருக்கிறது.தனிமையில் இளையராஜாவும் ரஜினியும் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிள் என்னோட கிரிக்கெட் விளையாட வர்றீங்களா? என்று யதீஷ்வர் கேட்க, இளையராஜாவே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போயியுள்ளார். டேய் அவரு யாரு.. அவரை போயி உன்கூட விளையாட கூப்பிடுற என்று செல்லமாய் பேரனை அதட்டல் போட்டும் உள்ளார் இளையராஜா. 

பதிலுக்கு நடிகர் ரஜினி விடுங்க குழந்தை தானே என சொல்லிவிட்டு விளையாட சென்றிருக்கிறார். ரஜினி பந்து வீச இளையராஜாவின் பேரன் யதீஷ்வர் மட்டையை வீசி ஆட, பிறகு ரஜினி கிரிக்கெட் ஆட இப்படியே பொழுது கழிந்திருக்கிறது.இதனை இளையராஜா சிரித்தபடி கண்டு ரசித்தும் உள்ளார். இவர்கள் இருவரின் நட்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை தூண்டி வருகிறது.