ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்...

நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்...

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை என்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு முன்பாக ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக காலையிலிருந்து காத்திருந்தனர்.

ஒவ்வொரு பண்டிகையின் பொழுதும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த வாழ்த்து பெறுவதற்காக அவரது இல்லத்திற்கு வருவார்கள்.

மேலும் படிக்க | தீபாவளி வாழ்த்து கூறிய குடியரசு தலைவர்..!!!

அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரை சந்தித்த வாழ்த்து பெறுவதற்காக வந்து காத்திருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த், அவரது இல்லத்திற்கு வெளியே வந்து ரசிகர்களை சந்தித்த கையசைத்தபடி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினியைக் காண்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்தும் பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். ரஜினியைப் பார்த்தப் பின்புதான் தங்கள் தீபாவளிப் பண்டிகை முழுமையானதாகவும் , ரஜினியைக் காண்பதுதான் எங்களுக்கு தீபாவளி என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!!!