ஜெய்பீம்-ன் நிஜ நாயகி பார்வதி அம்மாளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய- நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

இருளர் இன மக்களின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஜெய்பீம். 

ஜெய்பீம்-ன் நிஜ நாயகி பார்வதி அம்மாளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய- நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

இருளர் இன மக்களின் உண்மைக் கதையை வைத்து உருவான திரைப்படம் தான் ஜெய் பீம். இத்திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்க நடிகர் சூர்யா தயாரித்து இருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஜெய் பீம்' ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் நிஜ கதாநாயகியான பார்வதி அம்மாள் வறுமையில் இருந்து வருவதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து நடிகரும் நடன இயக்கனருமான ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாளுக்கு வீடு ஒன்றை கட்டித்தருவதாக தெரிவித்தார். இருப்பினும் பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக வீடு கட்டி கொடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாளின் குடும்பத்தை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவருக்கு வீடு கட்டி கொடுக்க வைத்திருந்த பணத்தை அவரின் மூத்த மகன் , இளைய மகன் மற்றும் மகள் என மூவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் பலரும் இவரை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.