கால் தவறி கீழே விழுந்த நடிகர் நாசர்..! மருத்துவர்கள் கூறிய அறிவுரை..!

லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் தகவல்..1

கால் தவறி கீழே விழுந்த நடிகர் நாசர்..! மருத்துவர்கள் கூறிய அறிவுரை..!

நடிகர் நாசருக்கு காயம்: ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்று கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட படப்பிடிப்பின் போது, நடிகர் நாசர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கால் தவறி விழுந்த நாசர்: ஹைதராபாத்தில், நாசர், சுகாசினி ஆகியோர் நடிக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்று வருகிறது. அப்போது படிக்கட்டு ஒன்றின் மீது தாவி குதிக்கும் காட்சியில் நடித்து கொண்டிருந்த நாசர் கால் தவறி கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். 

விரைவில் குணமடைவார்: அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.