’விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார்? உங்ககிட்ட ஆதாரம் இருக்கா? காயத்ரி ரகுராமை வறுத்தெடுத்த நடிகர்

விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

’விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார்? உங்ககிட்ட ஆதாரம் இருக்கா? காயத்ரி ரகுராமை வறுத்தெடுத்த நடிகர்

பிஎஸ்பிபி பள்ளி பாலியல் விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஷால் தனது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ்க்கு "PSBB-ன் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைக்கிறது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோரிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, இதுபோன்ற குற்றங்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நான் எனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வலுவான நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன் என்று கூறியிருந்தார்.

விஷாலின் இந்த கருத்துக்கு, விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம்  உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.யதார்த்தத்தை சரி பார்க்கவும். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள் என நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் நடிகர் விஷால் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள காயத்ரி ரகுராம் " சினிமா துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடக்கும் துன்புறுத்தல்களை கண்டியுங்கள். புதிதாக இத்துறைக்குள் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் விஷால். பெண் முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். பயன்படுத்தி தூக்கி எறிய, நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திரைப்பட தொழில்துறை பெண்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும்போது நீங்கள் உங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும். யதார்த்தத்தை சரி பார்க்கவும். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

விஷால் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஷாலின் நண்பரும் நடிகருமான நந்தா, நடிகை காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் "விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுப்பது தான் சிறந்தது என்றும் அரசியலுக்காக முட்டாள்தனமான கருத்து கூற வேண்டாம்" என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நடிகை காயத்ரி ரகுராம் ’முடிந்தது முடிந்ததுதான், அந்த பிரச்சனையிலிருந்து மீண்டுள்ள அவர்களின் எதிர்காலத்தை நான் கெடுக்க விரும்ப மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.