இரும்பு கம்பியை எடுத்து தாக்க முயற்சி... என் உயிருக்கு ஆபத்து - கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கதறல்

தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் மோகன் சர்மா புகார் அளித்துள்ளார்.

இரும்பு கம்பியை எடுத்து தாக்க முயற்சி... என் உயிருக்கு ஆபத்து - கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கதறல்

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் நடிகர் மோகன் சர்மா வசித்து வருகிறார். இளவயது முதலே திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த மோகன் சர்மாவுக்கு  75 வயதாகிறது.

இந்த நிலையில் மோகன் சர்மா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்  தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார் அளித்து ஒரு வருடமாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதியன்று சேத்துப்பட்டில் உள்ள தனது வீட்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக செல்ல வேண்டும் என்பதால் காரை எடுக்கச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு செல்கிறார்.

நான் அவரை அழைத்து காரை எடுக்கச் சொன்னேன்.  அதற்கு அந்த நபர் சாலையில்தான் காரை  நிறுத்தி இருக்கிறேன் என்று சொல்லி என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   பேசிக்கொண்டிருக்கும்போது இரும்பு கம்பியை எடுத்து வந்து என்னை தாக்க முற்பட்டார்.  

மேலும்,  எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு காரை எடுத்து சென்றார். அந்த நபர் அங்கிருந்து செல்லும்போது அவரது கார் என்னை புகைப்படமெடுத்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்திருந்தேன். ஆனாலும் இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

சென்னையில் 60 வருடங்களாக வசித்து வரும் தனக்கு தற்போது சென்னையில் பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டு இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.