இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் மயில்சாமியின் வீடியோக்கள்...!

இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் மயில்சாமியின் வீடியோக்கள்...!

மாரடைப்பால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி. இவர் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சினிமாவை தாண்டி சமூகத்தில் நடைபெறும் பல சர்ச்சையான விஷயங்களுக்கு குரல் கொடுப்பவர். ஆனால், சமீப காலமாகவே திரையிலும், பொது வெளியிலும் தோன்றாமல் இருந்து வந்த மயில்சாமி, இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, திரைபிரபலங்கள் நேரில் சென்று மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க : குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் திடீர் ரத்து...!

இந்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த மயில்சாமியின் சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒன்றாக நேற்றைய தினம் சிவராத்தியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணி நடத்திய நிகழ்ச்சியில் பாட்டுப் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல், முன்னதாக “கிளாஸ் மேட்ஸ்” என்ற படத்தில் அங்கயர் கண்ணன் என்ற கதாபாத்திற்காக டப்பிங் கொடுத்த வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.