சிறையில் இருந்தால் தான் தலைவர் என்றில்லை..! திரையில் இருந்தாலும் தலைவர் தான் - நடிகர் கமல்ஹாசன் பேச்சு...

தமிழகம் முழுவதுமாக துரிதமாக கமல்ஹாசன் ரத்தம் வழங்கும் திட்டத்தை இன்றைய நாளில் தொடங்கி வைத்துள்ளார். 

சிறையில் இருந்தால் தான் தலைவர் என்றில்லை..! திரையில் இருந்தாலும் தலைவர் தான் - நடிகர் கமல்ஹாசன் பேச்சு...

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ஜூன் 14-ம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பாக, கடந்த நாற்பது ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்கள் ஒருங்கிணைந்து, உதவி தேவைப் படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் கமல்ஸ் பிளட் கம்யூனி என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்று தொடங்கியது. 

இத்திட்டத்தை இன்று காலை 11 மணியளவில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்திருக்கிறார். அவ்வப்போது பேசிய அவர், சிறையில் இருந்தால்தான் தலைவர் என்றில்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான். நான் ஏற வேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக தான் ஏறி வருகிறேன்.

என் வைராக்கியமும், வீரமும் இன்னமும் குறையவில்லை. இது போல் நம்மவர் படத்தில் ரத்தம் கொடுப்பது தொடர்பான காட்சிகளை குறிப்பிட்டும், மேலும் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசியுள்ளார் நடிகர் கமல்.