விக்ரம் பட ப்ரோமோஷனில் இந்தியன் 2 க்கு அப்டேட் கொடுத்த நடிகர் கமல்ஹாசன்!! ரசிகர்கள் உற்சாகம்..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படம் கொரோனாக் காலக்கட்டத்தின் இக்கட்டான பிடியிலும் பொருளாதாரம் காரணமாகவும் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

விக்ரம் பட ப்ரோமோஷனில் இந்தியன் 2 க்கு அப்டேட் கொடுத்த நடிகர் கமல்ஹாசன்!! ரசிகர்கள் உற்சாகம்..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் கமல் நடித்திருந்து வெளியான திரைப்படம் இந்தியன். இப்படம் ரசிகர்களை தற்போது வரை கவர்ந்த படமாகவே கருதப்பட்டு வருகிறது. இதனையடுத்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷங்கரின் இயக்கத்தில் அதே நடிகர் கமலின் நடிப்பில் இந்தியன் 2 உருவாகி வருகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி , பாபி சின்ஹா போன்றோரும் நடிகை காஜல் அகர்வால் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரித் சிங், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இசைக்கு வளர்ந்து வரும் நமது இசை நாயகன் அனிருத் இசையமைக்க உள்ளார். 

இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகி படப்பிடிப்புகளும் நடிந்து கொண்டிருந்த நிலையில் கொரோனாவின் பிடியிலும் பொருளாதார சூழல் காரணமாகவும் சிக்கல் மற்றும் சில பிரச்சனைகளால் இந்தியன் 2 தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதனை அடுத்து தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமல் இந்தியன் 2 திரைப்படம் குறித்தும் படப்பிடிப்புகள் குறித்தும் தகவல் ஒன்றை தெரியப்படுத்தியுள்ளார்.

அதன் படி இந்தியன் 2 படப்பிடிப்பு பொருளாதார சிக்கல் காரணமாக தான் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புகள் நிச்சயம் தொடரும் எனவும், ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதை விட இத்திரைப்படத்தை நானும் இயக்குனர் ஷங்கரும் பெருமளவில் எதிர்பார்த்து வருவதாக தெரிவித்தார்.

தற்போது இயக்குனர் ஷங்கர் ராம் சரணின் ஆர்சி 15 திரைப்பட வேலைகளை பார்த்து வரும் நிலையில் அதன் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னதாக இந்தியன் 2 படத்துக்கான பணிகள் நிச்சயம் தொடரும் என்றார். இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தும் வருகின்றனர்.