தனுஷ் என்கிட்ட சொன்னது இது மட்டும் தான்...ஓப்பனாக பேசிய நடிகர் விஷ்ணு விஷால்!!

தனுஷ் என்கிட்ட சொன்னது இது மட்டும் தான்...ஓப்பனாக பேசிய நடிகர் விஷ்ணு விஷால்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஷ்ணு விஷால் சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் தான் FIR. தன்னுடைய படத்தை தானே தயாரித்து உள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தயாரிக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதி வாங்கி வெளியிடுகிறார்.

இதற்கிடையில் இவர் நடித்து வெளியாக உள்ள  FIR படத்தை பார்த்த நடிகர் தனுஷ் நடிகர் விஷ்ணு விஷாலை வெகுவாக பாராட்டியுள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்  மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் குறித்து பல்வேறு தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ஆனாலும், சக நடிகரின் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய விஷ்ணு விஷால் ராட்சசன் படத்திற்கும் இப்படத்திற்கும் எனது நடிப்பில் நிறைய மாற்றங்கள் உள்ளதாகவும் நடிப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் நடிகர் தனுஷ் பாராட்டியதாக தெரிவித்துள்ளார். இவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.